சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு

0 1032
நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றுகிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி மூவண்ணக் கொடியை ஏற்றுகிறார். இதனையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். குறிப்பிட்ட அழைப்பாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

விழாவையொட்டிப் பிரதமரின் பாதுகாப்புக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள், குறி பார்த்துச் சுடும் வீரர்கள், ஸ்வாட் கமாண்டோ படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். பட்டம், டிரோன் விமானங்கள் போன்றவை பறக்காமல் தடுக்கக் காவல்துறையினரின் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றி 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நாலாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லியின் முதன்மையான சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றியுள்ள 8 சாலைகளில் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிசாமுதீனில் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்குப் பின்னரே செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் டெல்லி - நொய்டா சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் தீவிரச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

வழக்கமாகப் பட்டியலிடப்பட்ட விமானங்கள், முப்படைகளின் விமானங்கள், ஆளுநர், முதலமைச்சர்கள் வரும் விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் டெல்லியில் நாளை காலை ஆறு மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் தரையிறங்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments