'ஆயிலும் இல்லை... கடனும் கிடையாது!' - மிஞ்சிய பாகிஸ்தான் சவுதியிடம் சமாதான தூது

0 11733

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளின் ஆதரவை திரட்ட பாகிஸ்தான் முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, Organisation of Islamic Cooperation என்ற அமைப்பில் ஆதரைவை திரட்ட முயன்றது. இந்த அமைப்பில் 57 இஸ்லாமிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சவுதி அரேபியா இந்த அமைப்பில் செல்வாக்கு மிக்க நாடு. எனவே ,இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாகிஸ்தான், சவுதி அரேபியாவை  கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் சவுதி அரேபியா பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று கூட்டத்தை கூட்ட மறுத்தது. காஷ்மீர் விவகாரத்தில் சவுதி தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என எண்ணிய பாகிஸ்தானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவு துறை மந்திரி மெக்மூத் குரேஷி அளித்த ஒரு பேட்டியில்,
''காஷ்மீர் விவகாரத்தில் சவுதி அரேபியா எங்களுக்கு ஆதரவாக இல்லை என்றால், இந்த விவகாரத்தில் எங்களுக்கு தோள் கொடுக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒரு கூட்டத்தை பாகிஸ்தான் தனியாக கூட்டும்'' என சவுதியை எச்சரிக்கும் விதத்தில் பேசினார்.

இதையடுத்து,  எச்சரிக்கும் விதத்தில் பேசிய பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா தடலாடி பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில் சவுதி அரேபியா 6.2 பில்லியன் டாலர்கள் கடன் உதவியை பாகிஸ்தானுக்காக அறிவித்தது.  3 பில்லியன் டாலர்கள் கடன் மற்றும் 3.2 பில்லியன் டாலர்கள் எண்ணெயாக வழங்கப்படுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

வாங்கிய கடனை பாகிஸ்தான் திருப்பி செலுத்தவில்லை. அதில், பாகிஸ்தான் 1 பில்லியன் டாலர் கடன் தொகையை உடனடியாக திருப்பிச் செலுத்த சவுதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நொந்து போன பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன் நாட்டு ராணுவத்தளபதி  ஜாவேத் பஜ்வாவை அனுப்பி சவுதி அரேபியாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments