பெங்களூர் வன்முறை தொடர்பாக மேலும் 60 பேர் கைது

0 2016
பெங்களூர் வன்முறை தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் வன்முறை தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் உட்பட மேலும் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகமது நபியைப் பற்றி பேஸ்புக்கில் எம்எல்ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் ஒருவர் அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறித் திங்களன்று பெங்களூரில் நூற்றுக்கு மேற்பட்டோர் திரண்டு எம்எல்ஏவின்  வீட்டையும், 2 காவல்நிலையங்களையும் தாக்கியதுடன் அப்பகுதிகளில் உள்ள வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தினர்.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சிப் பிரமுகர் முசமில் பாசா உட்பட 146 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெங்களூர் மாநகராட்சி நாக்வாரா பகுதி கவுன்சிலர் இர்சாத் பேகத்தின் கணவர் கலீம் பாசா உட்பட மேலும் 60 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இத்துடன் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளதாகப் பெங்களூர் மாநகரக் காவல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments