இணையவழி விசாரணை : பேப்பருக்கு பின் மறைந்து ஹூக்கா புகைத்த மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான்!

0 2210

ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளனர். இதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சியும் , பாரதிய ஜனதா கட்சியும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13- ந் தேதி இணையழியாக நடைபெற்றது.

ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மகேந்திர குமார் கோயல் விசாரணை நடத்தி வந்தார். மூத்த வழக்கறிஞரான கபில் சிபல் உள்ளிட்டோர் வழக்கு விசாரணையில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  மூத்த வழக்கறிஞரான ராஜீவ் தவான் ஆஜரானார். இந்த ராஜீவ் தவான் வேறு யாருமல்ல... அயோத்தி வழக்கில் இஸ்லாமிய தரப்புக்காக ஆஜராகி வாதாடியவர் ஆவார். வழக்கறிஞர் தொழிலில் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் இவர். 

இந்த வழக்கு விசாரணை இணையத்தில் நடைபெற்ற போது, மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் திடீர் திடீர் என தன் முகத்தை பேப்பரை கொண்டு மறைத்து கொண்டார். அப்போது, பேப்பருக்கு பின்னாலிருந்து புகை வெளி வந்தது. அதாவது, ராஜீவ் தவான் ஹூக்கா புகைத்தததால் வெளி வந்த புகை அது. வழக்கு விசாரைணையின் போது, மூத்த வழக்கறிஞர் ஒருவரே இப்படி நடந்து கொண்டதை பார்த்து நீதிபதி மகேந்திர குமார் கோயல் அதிர்ச்சியடைந்தார்.

ஆனாலும், ராஜீவ் தவான் மீது நீதிபதி கோபத்தை காட்டவில்லை. மாறாக, மிஸ்டர். ராஜீவ் தவான், 'உங்கள் வயதை கருத்தில் கொண்டு நீங்கள் சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும். சிகரெட் பிடித்தது உடல் நலத்துக்க கேடானது ' என்று நீதிபதி அறிவுரை கூறினார். இதையடுதது, ராஜீவ் தவான் கண்டிப்பாக  ஹூக்கா புகைப்பதை விட்டு விடுவதாக நீதிபதியிடத்தில் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments