வாட்ஸ் அப் காதலனுக்காக தூக்கில் தொங்கிய பெண்... வீடியோ காலில் கடைசி முத்தம்

0 4383
காரைக்குடி அருகே வாட்ஸ் அப் காதலன் பேச மறுத்ததால், தூக்கிட்டவாறு வீடியோ வெளியிட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்குடி அருகே வாட்ஸ் அப் காதலன் பேச மறுத்ததால், தூக்கிட்டவாறு வீடியோ வெளியிட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி பர்மா காலனியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ் அப் மூலம் காதல் மலர்ந்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் பிரபுதேவாவுடன் குடித்தனம் நடத்தி வந்த ராஜேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள கூறியதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு திடீர் காதலன் பிரபுதேவா தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. அவனை தொடர்பு கொள்ள இயலாததால் ஏமாற்றம் அடைந்த ராஜேஸ்வரி, வாட்ஸ் அப்பில் தூக்கிட்டுக்கொள்வது போல வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்

கடைசியாக தனது காதனுக்கு மூன்று முத்தங்களை அளித்து விட்டு தூக்கில் தொங்கிய வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி வரும் நிலையில், ராஜேஸ்வரியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வாட்ஸ் அப் காதலன் பிரபுதேவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

கணவன் மனைவிக்கிடையேயான பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வதை விட்டு, கருத்து வேறுபாடு என பிரிந்து சென்று உண்மையில்லா நபர்களை நம்பினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments