போலி ஆவணங்கள் மூலம் ரூ.50 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர் உட்பட இருவர் கைது

0 4569
போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தொழிலதிபர் உட்பட இருவரை ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர்.

போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தொழிலதிபர் உட்பட இருவரை ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர்.

ஜவுளித் தொழிலில் நஷ்டமடைந்த முகமது சாஹில் என்பவர் சில தினங்களுக்கு முன்பாக, தனது நிறுவனங்கள் மூலம் 50 கோடி ரூபாய் பணப்பரிவர்த்தனை செய்ததாகவும், அதற்காக இரண்டரை கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கக் கோரியும் மும்பை ஜி.எஸ்.டி அலுவலகத்தை அணுகியுள்ளார்.

ஊரடங்கில் நடைபெற்ற இந்த பெரும் பரிவர்த்தணை தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஜி.எஸ்.டி ஆலோசகர் கந்தசாமி என்பவரின் உதவியுடன் 5 போலியான நிறுவனங்களின் பெயரில் ஆவணங்களை தயாரித்து சமர்பித்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட, போலி ஆவணங்களை தயார் செய்த ஆடிட்டர் சரவணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments