கொரோனா சிகிச்சை பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை நிர்வாகம்

0 3006
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பி. அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், 74 வயதான மூத்த பாடகரான எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

முன்னர் எஸ்.பி.பியும் தமது உடல்நிலை குறித்து தானே பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments