சாலை வசதி இல்லாததால் மலைப்பாதை வழியாக நோயாளியை தோளில் சுமந்து சென்ற உறவினர்கள்

ஜம்மு காஷ்மீரில் தோதா நகரில் சாலை வசதி இல்லாததால் நோயாளியை உறவினர்கள் மலைப்பாதை வழியாக தோளில் சுமந்து செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
பன்சாலா எனும் அந்த மலையடிவார கிராமத்தை நகர்ப்பகுதியுடன் இணைக்க சரியான சாலை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால், கால் முறிவு ஏற்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் அப்பகுதிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மரக்கட்டைகளால் ஆன ஸ்ட்ரக்சர் போன்ற அமைப்பில் நோயாளியை வைத்து, பொதுமக்கள் சிலர் மாறி மாறி தங்களது தோளில் சுமந்தவாறு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
#WATCH J&K: Locals of Banshala village, Doda carried a patient on a makeshift stretcher to hospital due to poor road connectivity. District Official says, "Spoke to Pradhan Mantri Gram Sadak Yojana authorities. They told me no proposal approved yet but assured me to look into it" pic.twitter.com/aTTNG0Czlh
— ANI (@ANI) August 13, 2020
Comments