பாதுகாப்பு துறை பொருட்களுக்கு இனி வெளிநாட்டை சார்ந்திருக்க முடியாது - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 1772
இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருட்களுக்கு இனி வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்க முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு தேவையான தளவாடப் பொருட்களுக்கு இனி வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்க முடியாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தன்னிறைவு வாரம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், காணொலி மூலம் கலந்து கொண்டு பேசிய அவர்,  பாதுகாப்பு துறைக்கு வெளிநாட்டுப் பொருட்களை சார்ந்து இருப்பது, தற்சார்பு இந்தியா என்ற நோக்கத்திற்கு இணக்கமானது அல்ல என்று கூறினார்.

மற்ற எந்த துறைகளையும் விட பாதுகாப்பு துறையில், சுய நம்பகத்தன்மை மிக முக்கியம் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். நமது தேச நலனை உறுதி செய்வதோடு, மற்றவர்களுக்கு தேவைப்படும் போது உதவவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு துறைக்காக, இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களை காண்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments