இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0 2925
கலை - அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அனைவருக்கும் பட்டங்களை வழங்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்

கலை - அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு கடைசி செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், அனைவருக்கும் பட்டங்களை வழங்குமாறு,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள ஓர் அறிக்கையில், மாநி லங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இறுதியாண்டில் “கேம்பஸ் இன்டர்வியூவில்” தேர்வு பெற்ற மாணவர்கள், தங்க ளுக்கு கிடைத்த வேலைகளில் சேர முடியாத சூழல் உருவாகி உள்ளதாகவும், உயர்கல்வி, வெளிநாட்டு கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள் தடை பட்டு உள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டி உள்ளார்.

எனவே, கனவுகளுடன் காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்குக் கால தாமதமின்றி வழி காட்டிட முன்வருமாறு,  மத்திய - மாநில அரசுகளை, மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments