சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் - தமிழக அரசு தரப்பில் வாதம்

0 1923
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு, மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை சட்டப்பேரவைக்குள்  கொண்டு வந்ததற்காகவே சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்கு பரிந்துரைத்ததாக வாதிட்டார். அரசு தரப்பு வாதம் முடிவடையாததால், விசாரணை வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments