துபாய் இளவரசர் விட்டு கொடுத்த கார்... புது உறவு வருகையால் மகிழ்ச்சியில் தாய்பறவை!

0 7213

துபாயின் பட்டத்து இளவரசராகவும், ஷேக் ஹம்தான் பின் ராஷித் அல் மக்தூம் அனைத்து உயிரினங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். இதற்காகவே தனி இடத்தில் பல்வேறு விலங்குகளை மிக பாசமாக வளர்த்து வருகிறார். கொரோனா பாதிப்பு காலங்களில் பட்டத்து இளவரசர் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து வந்தார்.

இதனால், அவரின் வாகனங்கள் பல பயன்படுத்தாமல் இருந்தன. அதில் துபாய் இளவரசர் அடிக்கடி பயன்படுத்தும் கருப்பு நிற மெர்சிடஸ் வாகனமும் ஒன்று. வாகனம் பயன்படுத்தாமல் விடப்பட்டதால் அந்த பென்ஸ் காரின் முகப்பு பகுதியில் சிறிய பறவை ஒன்று கூடுக்கட்டி முட்டையிட்டது.

பின்னர் அதில் அமர்ந்து அடைகாக்க தொடங்கியது. இதனை பார்த்த பட்டத்து இளவரசர் அந்த வாகனத்தை பயன்படுத்தாமல் விட்டு விட்டார். மேலும் கூட்டை கலைக்கும் விதமாக அந்த வாகனத்தை சுற்றி பணியாளர்கள் யாரும் நடந்து விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கை செய்யும் வகையில் சிவப்பு நிற டேப்பை நான்கு புறத்திலும் சுற்றி வைத்தார்.

பறவைக்காக அது கட்டிய கூட்டுக்காக காரை எடுக்காமல் அப்படியே இளவரசர் விட்டு விட்ட செய்தி வைரலானது. தற்போது, துபாய் இளவரசர் விட்டுக் கொடுத்த காரில் உள்ள கூட்டில் முட்டை பொறித்து அழகிய குஞ்சு வெளி வந்துள்ளது. குஞ்சு வெளி வந்ததும் தாய்ப்பறவை முட்டை ஓட்டை தூக்கி வெளியே போடும் காட்சியையும் அதோடு, தங்களுக்கு கிடைத்த புது உறவை தாய்ப்பறவையும் தந்தை பறவையும் அன்புடன் பராமரித்து வரும் காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து துபாய் இளவரசர் வெளியிட்டுள்ளார்.

துபாய் இளவரசரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments