ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா வந்தவரை பைக்கில் கொண்டு சென்ற நபர்

0 2423
ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கொரோனா வந்தவரை பைக்கில் கொண்டு சென்ற நபர்

கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் நபர் ஒருவரை, ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தால், பிபிஇ எனப்படும் முழுஉடல் கவச ஆடை ஆணிந்து, பைக்கில் வைத்து கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லவபூர் நகரில், திரிணமூல் காங்கிரசை சேர்ந்த சத்யாகாம் பட்நாயக் என்பவரே முன்னெச்சரிக்கையுடன் இந்த செயலை செய்துள்ளார்.

புலம் பெயர் தொழிலாளியான அமல் பாரிக் என்பவருக்கு கடந்த ஐந்தாறு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருப்பதாக தமது கட்சியினர் தெரிவித்ததை அடுத்து பிபிஇ உடையுடன் மருத்துவமனைக்கு பைக்கில் அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments