விலை குறைவான ரெம்டெசிவரை விற்பனைக்கு வெளியிட்டது கெடிலா

0 6913
விலை குறைவான ரெம்டெசிவரை விற்பனைக்கு வெளியிட்டது கெடிலா

லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவரின், விலை குறைந்த ஊசி மருந்தை ஸைடஸ் கெடிலா நிறுவனம் இன்று விற்பனைக்கு வெளியிட்டது.

ரெம்டாக் (Remdac) என்ற பெயரில் வெளியாகி உள்ள இந்த மருந்தின் விலை ஊசி ஒன்றுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாயாகும். இதர பிராண்டுகள் 4000ரூபாய் அல்லது அதற்கு கூடுதலாக விற்கப்படுகின்றன.

இந்தியாவில் ஏற்கனவே ஹெட்டரோ லேப், சிப்லா, மைலன் என்வி, ஜூபிலியன்ட் ஆகிய நான்கு மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவரை விற்பனைக்கு வெளியிட்டுள்ளன.

இந்தியா உள்ளிட்ட 127 நாடுகளுக்கு ரெம்டெசிவரை உற்பத்தி செய்து விற்க, டாக்டர் ரெட்டி லேப் மற்றும் சினர்ஜி இன்டர்நேஷனல் ஆகிய மருந்து நிறுவனங்களுடன், ரெம்டெசிவரின் உரிமையாளரான ஜிலெட் சயன்சஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments