அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு ?

0 1021

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்த பிறகு துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் மீண்டும் ராஜஸ்தான் திரும்பி அசோக் கெலாட்டுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து காங்கிரஸ் சட்டமன்ற கட்சிக் கூட்டம் இன்று மாலை ஜெய்பூரில் நடக்கிறது. இதனிடையே, மாநில அரசியல் நிலைமை குறித்து ஜெய்பூரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது.

மூத்த தலைவர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அதில் நாளை கூடும் ராஜஸ்தான் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments