சென்னை, மதுரை, திருநெல்வேலியில் பிளாஸ்மா தானம் வழங்க இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பிளாஸ்மா தானம் வழங்குவதற்கு இந்திய சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த காவல்துறையினர் 40 பேர் பிளாஸ்மா தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஒருவர் வழங்கும் பிளாஸ்மா தானம் மூலம் இரு உயிர்களை காப்பாற்றலாம் என்றார். மேலும் இதுவரை பிளாஸ்மா தானம் மூலம் 2 லட்சத்து 56 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tamil Nadu: 40 police personnel of Chennai Police donate blood plasma at Chennai's Rajiv Gandhi General Hospital. State Health Min Dr C Vijayabaskar also present.
— ANI (@ANI) August 13, 2020
Chennai Police Commissioner says, "Other personnel who have recovered from #COVID19 also willing to donate plasma." pic.twitter.com/eAhmDqxQ5K
Comments