முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்குத் தண்ணீர் திறப்பு

0 1051
முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குப் பாசனத்துக்குத் தண்ணீரைத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்குப் பாசனத்துக்குத் தண்ணீரைத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் திறந்து வைத்தார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 137 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2211 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 2160 கன அடியாகவும் இருந்தது.

இதனால் அணையின் சுரங்க வாய்க்கால் வழியாகத் தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி தேக்கடியில் தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நடைபெற்றது.

சிறப்புப் பூசை, வழிபாடுகளுக்குப்பின் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் சுரங்க வாய்க்காலுக்கான ஷட்டரை இயக்கித் தண்ணீரைத் திறந்துவிட்டார். தமிழகத்துக்கு நொடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments