அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின் குவியும் நிதி..24 மணி நேரத்தில் ரூ.194 கோடி..!

0 2704
அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திய மதிப்பில் 194 கோடி ரூபாய் நிதியை ஜனநாயக கட்சி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக இந்திய மதிப்பில் 194 கோடி ரூபாய் நிதியை ஜனநாயக கட்சி திரட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்தார். இந்த நிலையில், அக்கட்சியின் ஆன்லைன் நிதி திரட்டும் பிரிவான ஆக்ட் ப்ளு, ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் கிட்டத்தட்ட 11 மில்லியன் டாலர்களை நன்கொடையாக பெற்றதாக அறிவித்தது.

ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நன்கொடையாளர்களை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி திரட்டலில் ஹாரிஸ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments