லடாக் எல்லைப் பிரச்சனையை சிக்கலாக்க இந்தியா முயலாது-சீனா நம்பிக்கை

லடாக் எல்லைப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்று நம்புவதாக சீனா கூறியுள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்று நம்புவதாக சீனா கூறியுள்ளது.
கட்டுப்பாட்டு எல்லையில் நிலவும் பதற்றம் இப்போதைக்கு குறையாது என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியில் உள்ள சீன தூதரக செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பாதி வழியில் நிற்கும் தருணத்தில் இந்தியா அதை சிக்கலாக மாற்றாது என நம்புவதாக டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் அமைதியும், சமாதானமும் நிலவுவதற்கான சூழலை உருவாக்கவும், இருதரப்பு உறவை மேலும் அதிகரிக்கவும் இந்தியா முயலும் என நம்புவதாக டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments