தமிழகத்தில் நகரும் நியாயவிலைக் கடைகளை தொடங்க தமிழக அரசு அரசாணை

தமிழகத்தில் மூவாயிரத்து 501 நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்கிச் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூவாயிரத்து 501 நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்கிச் செயல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே இன்றியமையாப் பொருட்களை வழங்குவதற்காக மூவாயிரத்து 501 நகரும் நியாயவிலைக் கடைகள் 9 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பில் தொடங்கிச் செயல்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்கிச் செயல்படுத்தக் கூட்டுறவுச் சங்கப் பதிவாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகரும் நியாயவிலைக் கடைகளைத் தொடங்க மாவட்ட ஆட்சியருடன் இணைந்து செயல்படவும் சிறப்புக் கவனம் செலுத்தவும் சென்னை மண்டலக் கூடுதல் பதிவாளரையும், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களையும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Comments