விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை
விநாயகர் சதுர்த்தியையொட்டிப் பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவவும், விழா கொண்டாடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவவும், விழா கொண்டாடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை அவரவர் வீடுகளில் கொண்டாட அறிவுறுத்தியுள்ளது. கோவில்களில் வழிபாட்டின்போது வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கும் கோவில் நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
Comments