மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.4 அடியாக உயர்வு

0 867

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 புள்ளி 4 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 15 ஆயிரம் கன அடியாக உள்ளது. ஆகஸ்டு 4 முதல் ஒருவாரக் காலம் கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.

மழைப்பொழிவு குறைந்தபின் கர்நாடகத்தில் இருந்து தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 61 புள்ளி 5 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு நொடிக்குப் பத்தாயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments