பவானிசாகர் அணையில் நாளை நீர் திறப்பு..!

0 669
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நாளை தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் நாளை தண்ணீரைத் திறந்து வைக்க உள்ளனர்.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101 புள்ளி 5 அடியாகவும், நீர் இருப்பு 29 புள்ளி 9 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து ஆறாயிரத்து 541 கன அடியாக உள்ளது.

அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆற்றில் ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணை நீர் திறப்பின் மூலம் ஒரு லட்சத்து மூவாயிரத்து ஐந்நூறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments