கண்ணன் பிறந்தான் - களை கட்டிய ஜன்மாஷ்டமி கொண்டாட்டங்கள்

0 1063

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, மதுரா உள்ளிட்ட முக்கிய திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கிருஷ்ண ஜெயந்தி வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டது. பகவான் கிருஷ்ணரின் பிறப்பிடமாக கருதப்படும் மதுரா நகரம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கண்ணன் பிறந்த சிறை ஆலயம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் ஒளிவீசின.

டெல்லியில் உள்ள இஸ்கான் ஆலயத்திலும் ஜன்மாஷ்டமி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.பக்தர்கள் பஜனைகளைப் பாடி ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதே போன்று குஜராத் மாநிலம் துவாரகா உள்ளிட்ட பல இடங்களிலும் கண்ணனை வழிபடுவதற்காக கோவில்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதும் இதுபோன்ற விழாக்காலங்களில் யதார்த்தத்தை பக்தி வென்றுவிடுவதில் வியப்பில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments