பேஸ்புக்கில் கலாய்க்கும் நெட்டிசன்கள்... சீரியசாய் பகிரும் மார்கண்டேய கட்ஜூ!

0 12756
முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்த பிறகு சீரியசாக ஃபேஸ்புக்கில் தன் கருத்துகளைப் பகிரத் தொடங்கினார். இந்திக்கு ஆதரவாகவும், தமிழுக்கு எதிராகவும் தன் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இவரைக் கிண்டல் அடித்து நெட்டிசன்கள் பகிரும் செய்திகளையும் அப்படியே உண்மை என்று நம்பி சீரியசாகப் பகிர்ந்து வருகிறார் மார்கண்டேய கட்ஜூ.

image

திமுக எம்பி கனிமொழி இந்தி பேசாததால் டெல்லி விமான நிலையத்தில் ஐ.ஐ.எஸ்.எப் அதிகாரி , ‘நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டது சர்ச்சையைக் கிளப்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த நிகழ்வைக் கண்டித்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இந்தப் பிரச்னையைக் குறித்து பேஸ்புக்கில் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அதில், இந்தியாவுக்கு இணைப்பு மொழியாக இந்தி தான் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பெங்காளி, காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் கூட இந்தியைப் பேசுகிறார்கள். இந்தியைத் திணிக்கக்கூடாது. ஆனால், எல்லோரும் கற்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து அவரது போஸ்டில் பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு அவருக்குத் தனிப்பட்ட முறையில், இந்திக்கு ஆதரவாகத் தமிழகத்திலிருந்து வந்த செய்திகளையும் பகிரத் தொடங்கினார்.

image

இந்த சூழலில் அமெரிக்காவிலிருந்து ஒருவர், ஹிந்தி தெரியாததால் நான் அமெரிக்காவில் இந்தியர்களுடன் பேச முடியாமல் சிரமப்பட்டேன் என்று சீரியசாக செய்தி அனுப்பியிருந்தார். அதை ஷேர் செய்த மார்கண்டேய கட்ஜூ, தமிழக அரசியல் கட்சிகளால் தான் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

அதற்குப் பிறகு அவரைக் கிண்டல் செய்து தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்த செய்திகளையும் அவர் பகிர்ந்துள்ளது சிரிப்பை வரவழைப்பதாகவே உள்ளது. பலரும் அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளிலும் ஹிந்தி தெரியாமல் சிரமப்பட்டதாகக் கலாய்க்கும் தொனியில் அனுப்பிய செய்திகளையும் சீரியசாகப் பகிரத் தொடங்கினார் மார்கண்டேய கட்ஜூ.

பிரபு டி சங்கர் என்பவர் அனுப்பிய செய்தியில் டிக்கிலோனா, ஜில் ஜங் ஜக் விளையாட்டுகளை என்னால் ஹிந்தி தெரியாததால் விளையாட முடியவில்லை என்று அனுப்பியதைப் பகிர்ந்தார். இதைப்போன்ற அவரைக் கலாய்க்கும் பல செய்திகளைப் பகிர்ந்து வருகிறார்.

image

இறுதியாக, பெர்னாண்டோ எனும் நெட்டிசன் பானிபூரி விற்பவர்கள் அனைவரும் ஹிந்தி தான் பேசுகிறார்கள். இதனால் கடைகளில் பீடா, பானிபூரியைக் கூட வாங்கி சாப்பிட முடியவில்லை. ஜெர்மனியில் பணிபுரியும் தமிழ் மட்டுமே தெரிந்த விஞ்ஞானிகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். ஹிந்தி தெரிந்தவர்கள் பானிப்பூரி விற்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விஞ்ஞானிகளாகப் பல்வேறு நாடுகளிலும் பணிபுரிகிறார்கள் என்று சீரியராகக் கலாய்த்ததைக் கூட உண்மை என்று நம்பி அப்படியே ஒரு வரியைக்கூட மாற்றாமல் பகிர்ந்துள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.

image

இந்த சூழலில் நேற்றிரவு ‘நானும் தமிழர் தான். தமிழர் வாழ்க’ என்று போஸ்ட் போட்டிருந்தார். தொடர்ந்து ஹிந்தி விவகாரத்தில் அவருக்கு வரும் செய்திகளைப் பகிர்ந்து வருகிறார். அவரது கருத்துக்கு ஏராளமானோர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments