"மணல் கடத்தல்: நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம்" - நீதிபதிகள்

0 1439

மணல் கடத்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

சிவலூரைச் சேர்ந்த ஒருவர் உடன்குடி தாலுகா பகுதியில் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள், தலைமைச் செயலர், தொழில் துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மணல் கடத்தல் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? வழக்குகளின் விசாரணை நிலை என்ன? என்பது உள்ளிட்டவை குறித்து பதில் தாக்கல் செய்ய தூத்துக்குடி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை செப்டம்பர் மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments