700 கிலோ எடையைத் தூக்கும் தும்பிக்கை,  தேனீக்கள் என்றால் பயம் - யானைகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!

0 13873
யானை

ற்போது தரையில் வாழும் உயிரினங்களுள் மிகப் பெரிய உயிரினம் யானைகள் தான். உலகில் வேகமாக வேட்டையாடப்பட்டு வரும் யானைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் 2012 - ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 12 - ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. யானைகள் தினத்தில் சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம். 

ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பே பூமியில் தோன்றிவிட்ட உயிரினம்,  மோரிதேரியம். யானைகளின் முன்னோடிகள் இவை என்கிறார்கள். தொடக்க காலத்தில் யானைகள் பன்றியளவே சிறியதான இருந்ததாம். காலப்போக்கில் பெரிய  வடிவமுடையதாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளன.

image

பொதுவாக ஆப்பிரிக்க காட்டு யானை, ஆசிய யானை என்று இரண்டு  வகையான யானைகள் காணப்படுகின்றன. ஆசிய யானையை விடவும் ஆப்பிரிக்க யானைகள்  அதிக எடை, அதிக உயரம் கொண்டது. சராசரியாக 9 அடியிலிருந்து 15 அடி வரை வளரக்கூடிய யானைகள் அதிகபட்சம் 10 டன் எடை வரை இருக்கும்.

1956 ம் ஆண்டு அங்கோலாவில் ஆப்பிரிக்க யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டது. அது 13 அடி உயரத்துடன் 11 டன் எடையைக் கொண்டிருந்தது. இதுதான் மனிதன் அறிந்தவற்றுள் மிகப்பெரிய யானையாகக் கருதப்படுகிறது.

யானைக் குட்டிகள் ஐந்து ஆண்டுகள் வரை தாய்ப்பாலைக் குடிக்கின்றன. தாய் மட்டுமல்லாமல் எந்த யானை பால் கொடுத்தாலும் குடிக்கும் பழக்கமுடையவை குட்டிகள். பிறக்கும் போது குட்டிகள் 90 முதல் 135 கிலோ எடை வரை கொண்டிருக்கும்.

யானையின் முதுகெலும்பை விடவும் அதன் துதிக்கை தான் வலிமையானது. துதிக்கையில் மட்டும் சுமார் 40,000 க்கும் மேற்பட்ட தசை அடுக்குகள் காணப்படுகின்றன. ஒரு வளர்ந்த யானை தன் துதிக்கையால் சுமார் 700 கிலோ எடையைக் கூட தூக்க முடியுமாம். யானை தன் துதிக்கையால் சுவாசித்தாலும், அதன் வாயால் தான் வாசனைகளை அறிந்துகொள்கின்றன. பல கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தைக்கூட யானைகளால் எளிதில் கண்டறிய முடியும்.

image

ஏழாயிரம் கிலோ எடையைக் கொண்டதாக யானைகள் இருந்தாலும் அவற்றால் 50 கிலோ மீட்டரைக் கூட தொடர்ச்சியாக நீந்திக் கடக்க முடியும். மனிதன் எவ்வளவு நேரம் நீருக்குள் மூச்சை அடக்குவானோ அதே அளவுக்கு யானைகளாலும் தம் கட்ட முடியும்.

காட்டில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் யானைகளைப் பார்த்துப் பயந்து ஓடினாலும் யானைகள் பார்த்துப் பயப்படுவது தேனீக்கு மட்டும் தான். தேனீயின் ரீங்கார சத்தத்தைக் கேட்டலே யானைகளுக்குப் பிடிக்காது.

மனிதர்களுள் இடது கை பழக்கம், வலது கை பழக்கம் கொண்டவர்களைப் போலவே யானைகளுக்குள்ளும் இந்தப் பழக்கம் உண்டாம். யானை எந்தப் பக்கம் தும்பிக்கையை அதிகம் பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் அடையாளப்படுத்தலாம் என்கிறார்கள்.

யானைகளின் சண்டைகள் வேடிக்கையானது. சண்டையிடும்போது களைப்பு ஏற்பட்டால் ஓய்வெடுத்து சண்டைபோடும். சிறிது நேரம் உணவு எடுத்துக்கொள்ளூம். தண்ணீர் குடிக்கும். பிறகு மறுபடியும் சண்டை போடும். இப்படியே  யானையில் ஒன்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கும் வரை சண்டை வாரக்கணக்கில் கூட நீடிக்கும்.

உலகில் வாழ்ந்தவற்றுள் மிகப்பெரிய விலங்குகளாகக் கருதப்படுபவன டைனோசர்கள் தான். அவை அழிந்துவிட்ட நிலையில் இப்போது தரையில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய உயிரினம் யானைகள் மட்டுமே...

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments