கந்துவட்டி தொல்லை..? குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

0 4322
தூத்துக்குடியில் கந்துவட்டி பிரச்சனை என கூறி இரண்டு கைக் குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

தூத்துக்குடியில் கந்துவட்டி பிரச்சனை என கூறி இரண்டு கைக் குழந்தைகளுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

சூலவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 7 லட்சம் ரூபாயாக திருப்பி செலுத்திய நிலையிலும், வீட்டு பத்திரத்தை கொடுக்காமல் மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி கணேசன் குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றனர்.

விரைந்து செயல்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments