பொறியியல் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
கொரோனா சூழலில் பொறியியல் கல்லூரிகள் திறப்பு பற்றி இன்னும் அறிவிக்கப்படாததால் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி இணையவழி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
அக்டோபர் 26 வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நடைபெற வேண்டும் என்றும், பருவத் தேர்வுகள் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகள் இன்று முதல் தொடக்கம் #OnlineClass | #EngineeringStudents https://t.co/E70Y7U1pCG
— Polimer News (@polimernews) August 12, 2020
Comments