முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கியது கேரள அரசு

0 7564
இஸ்ரோ போலி உளவு வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது.

இஸ்ரோ போலி உளவு வழக்கில் கைது செய்யப்பட்டு நிரபராதி என விடுவிக்கப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரள அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளது.

இஸ்ரோ ரகசியங்களை எதிரி நாடுகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு இரண்டு மாலத்தீவு பெண்கள் வழியாக கடத்தினார் என கடந்த 1994 ல் நம்பி நாராயணனும் மற்றொரு விஞ்ஞானியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு போலியானது என கடந்த 2018 ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு 50 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்கியது. கூடுதல் இழப்பீட்டிற்காக திருவனந்தபுரம் அமர்வு நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்த நிலையில்,மாநில அரசு அவருக்கு ஒரு கோடியை 30 லட்சம் ரூபாயை கூடுதலாக அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments