பலமான காற்று, விமானிகளின் தவறான முடிவு, ஓடுபாதையின் நிலைமை உள்ளிட்டவையே விபத்துக்கு காரணம்

0 2805
பலமான காற்று, விமானிகளின் தவறான முடிவு, ஓடுபாதையின் நிலைமை, ஐஎல்எஸ் எனப்படும் தரையிறக்கும் வசதி குறித்த தவறான குறியீடு ஆகியன கோழிக்கோடு விமான விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக கோழிக்கோட்டில் முதல் தடவை விமானத்தை இறக்குவதில் பிரச்சனை எற்பட்ட பிறகு, அருகில் உள்ள வேறு விமான நிலையத்திற்கு செல்லாமல், மீண்டும் கோழிக்கோட்டில் விமானத்தை தரையிறக்க விமானிகள் எடுத்த முடிவும் தவறானது என அவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரம், முழுமையான விசாரணை நடந்த பிறகே விபத்துக்கான உண்மை காரணம் தெரியவரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினராக இருந்துள்ள கேப்டன் மோகன் ரங்கநாதன், மழைக்காலங்களில் ஓடுபாதையில் விமானம் இறங்கும் திசையில் காற்று வீசினால், விபத்து ஏற்படும் என தாம் கடந்த 2011 ஆம் ஆண்டே தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments