தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1832 ரூபாய் குறைந்தது

0 55735
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 ரூபாய் குறைந்தது

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரத்து 832 (1,832) ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 104 ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை கடந்து வேகமாக அதிகரித்தது. கடந்த 7ம் தேதி கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 416 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 43 ஆயிரத்து 328 ரூபாயாகவும் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது. இருப்பினும் அதற்கடுத்து 3 நாள்களிலும் தங்கம் விலை சரிந்தது. நேற்று கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 242 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 41 ஆயிரத்து 936 ரூபாயாகவும் குறைந்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 13 ரூபாயாக குறைந்தது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 229 ரூபாய் குறைவாகும். இதேபோல் சவரன் தங்கம் விலையும் ஆயிரத்து 832 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 104 ரூபாயாக விற்பனையாகிறது.

அதேநேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையான 82 ஆயிரத்து 800 ரூபாயிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments