'சென்னை' கமலா ஹாரீசுக்கு அடித்தது ஜாக்பாட்: அமெரிக்க துணை அதிபர் ஆவாரா?

0 15328
குடும்பத்துடன் கமலா ஹாரீஸ் (இடது ஓரம்)

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ், ஒரு கட்டத்தில் வேட்பாளருக்கான தேர்தலில் போதிய ஆதரவு இல்லாமல் ஒதுங்கிக் கொண்டார். தற்போது, இவரை துணை அதிபருக்கான வேட்பாளராக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜே பிடன் அறிவித்துள்ளார். 

கமலா ஹாரீஸ் சென்னையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். கமலாவின் தாத்தா பி.வி. கோபாலன் சுதந்திரப் போராட்டத் தியாகி. பாட்டி ராஜம் பெண்கள் உரிமைக்காகப் போராடியவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தாத்தா, பாட்டி போல கமலாவும் போராட்ட குணம் நிறைந்தவர்தான். கமலாவின் தாயார் பெயர் ஷியாமலா. இவர், 19 வயது வரை சென்னையில்தான் படித்தார். புற்று நோய் நிபுணரான இவர், ஜமைக்காவை சேர்ந்த டொனால்டு ஹாரீஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கலிபோர்னியாவில் ஓக்லேண்ட் என்ற இடத்தில் குடும்பம் வசித்தது. கமலா ஹாரீசுக்கு மாயா என்ற தங்கையும் உண்டு. ஹார்ட்வர்ட் பல்கலையில் படித்து வழக்கறிஞரான கமலா அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமாக கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக தேர்வு செய்யப்பட்டவர்.image

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆகி விட்டாலும். சென்னையுடன் கமலாவின் தொடர்பு விட்டுப் போகவில்லை. அடிக்கடி சென்னை வந்து சென்று கொண்டுதானிருக்கிறார். தற்போது 52 வயதான கமலா 2014- ம் ஆண்டுதான் டக்ளஸ் எம்காஃப் என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்தார்.

கமலாவுக்கு அவரின் தாயார் ஷியாமளதான் வழிகாட்டி. `சென்னையில் அவரின் தாயாரின்  சகோதரர் பாலு, சித்திகள் சரளா, சின்னி ஆகியோர் வசிக்கின்றர். 2009 -ஆம் ஆண்டு ஷியமலா கோபாலன் இறந்தார். அப்போது, அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த கமலா ஹாரீஸ் தாயின் அஸ்தியை வங்கக் கடலில் கரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2017-ம் ஆண்டு முதன்முறையாகக் கமலா செனட்டராகப் பதவியேற்ற போது, அவரின் சித்தி சரளாவும் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது, அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடனிடம் தன் சித்தியை அறிமுகம் செய்து வைத்தார் கமலா.

கடந்த 2009 -ஆம் ஆண்டு ஷியமலா கோபாலன் சென்னையில்தான் இறந்தார். அப்போது, அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்த கமலா ஹாரீஸ் தாயின் அஸ்தியை சென்னை கடலில் கரைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

போராட்டக் குணமிக்க கமலா ஹாரீஸ் ஒபாமாவுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். இதனால், ஜனநாயக கட்சியில் இவரை துணை அதிபராக அறிவிக்கப்பட எந்த எதிர்ப்பும் எழவில்லை. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments