வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கனமழை

0 1250

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

கடந்த 2 தினங்களாக மழை அளவு சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தற்போது எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வெள்ளமலை டனல், இறைச்சிப்பாறை, சின்னக்கல்லார் போன்ற பகுதிகளில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் மழைநீர் ஆர்ப்பரித்து வருகிறது. ஆங்காங்கே சிறுசிறு நீர் வீழ்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன.

அக்காமலை, கருமலை, சின்னக்கல்லார், சோலையார் அணை, முடீஸ், அட்டகட்டி ஆகிய பகுகளில் கனமழை பெய்து வருவதால் இறைச்சிப்பாறை, நடுமலை ஆறு, வாழைத்தோட்ட ஆறு, கூலங்கல் ஆறு போன்ற ஆறுகளில் நீர்வரத்தும் அதிகமாக காணப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments