ஆற்றில் குதித்த இளைஞனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய 12வயது சிறுவன்

0 4956
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்றில் குதித்த இளைஞரை சிறுவன் ஒருவன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினான்.

நைனிடால் மாவட்டம் ராம்நகர் அருகே பாலத்தில் சென்ற ஒருவர், திடீரென கோசி ஆற்றில் குதித்தார். அவரை காப்பாற்றுவதற்கு யாரும் முன்வராத நிலையில், 12 வயதேயான சிறுவன் ஆற்றில் குதித்து அந்த இளைஞனைக் காப்பாற்ற முயன்றான்.

பாய்ந்தோடும் வெள்ளத்தில் நீந்திச் சென்ற அச்சிறுவன், நீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞனை இழுத்து வந்து அருகில் இருந்த பாறையில் கிடத்தினான். அதற்குள் தகவல் அறிந்து வந்த போலீசார், இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments