ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் புடின் அறிவிப்பு

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயாராகிவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். தமது மகள்களில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடந்த அரசு விழாவில் பேசிய அவர், சோதனைகளின் போது பலனளிக்கும் முடிவுகள் வந்ததுடன், நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா தடுப்பூசி உருவாக்குவதாகவும் தெரிவித்தார். தடுப்பூசி போடப்பட்ட தமது மகள் நன்றாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த தடுப்பூசி மருத்துவப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொற்று வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் போடப்படும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசி ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், ஆயிரக்கணக்கானோரிடம் அது போடப்பட்டு 3 ஆம் கட்ட சோதனை முடிவுகள் வருவதற்கு முன்னர் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பல விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Comments