மணிப்பூரில் 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜக கூட்டணி வெற்றி

0 1525

மணிப்பூர் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றது.

அங்கு பிரேன் சிங் முதலமைச்சராக உள்ள நிலையில், 3 பாஜக எம்எல்ஏக்கள் காங்கிரசில் இணைந்தனர். கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் ஆதரவை திரும்பப் பெற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பின் தேசிய மக்கள் கட்சி பாஜகவிற்கு மீண்டும் ஆதரவு அளித்தது. இதனிடையே, காங்கிரசில் இணைந்த 3 பாஜக எம்.ஏக்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனாலும், பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை எனக்கூறி வந்த காங்கிரஸ், சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இதையடுத்து, நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில், 53 பேரில் 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பிரென் சிங் பெரும்பான்மையை நிரூபித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments