பெர்சீட் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பொழிவை நாளை இரவு காணலாம்

0 4983
பெர்சீட் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பொழிவை நாளை நள்ளிரவு அல்லது 12 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வானில் காணலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

பெர்சீட் என்று அழைக்கப்படும் விண்கற்கள் பொழிவை நாளை நள்ளிரவு அல்லது 12 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வானில் காணலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

ஸ்விஃப்ட்-டட்டில் என்ற வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற குப்பைகள் காரணமாக கடந்த மாத பிற்பகுதியில் இருந்து பெர்சீட் விண்கற்கள் வானில் தென்படுகின்றன. அதன் அளவு அதிகரித்துள்ளதாலும் தட்ப வெப்பநிலையை பொருத்தும் எந்த சிறப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கண்களால் பெர்சீட் விண்கற்கள் பொழிவை நாளை காணமுடியும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது.

விண்கற்கள் பொழிவை அதிகாலை 2 மணி முதல் விடியல் வரை பொதுமக்கள் தெளிவாக வானில் பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. பிரகாசமான திரைகளைக் கொண்ட சாதனங்கள் வழியே பார்ப்பது பார்வையை பாதிக்கும் என்பதால் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments