ஒப்பந்த அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் அரசுப் பேருந்துகள்

0 9293
தொழில் நிறுவனங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களை குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும், அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில், ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் தொடர்புகொள்ள மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments