' பாச மகள் திருமண வாழ்க்கை இப்படியாகி விட்டதே'- மருமகனால் குடும்பமே சிதைந்து போன பரிதாபம்

0 35835
தற்கொலை செய்து கொண்ட சாயி, பாபு, ஸ்வேதா

ஆந்திர மாநிலத்தில் தன் மகளை மருமகன் தினமும் கொடுமைப்படுத்தி வந்ததால், தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்த சோகம் தாங்காமல் அவரின் இரு மகள்களும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரைச் சேர்ந்தவர் பாபு ரெட்டி- விஜயபாரதி தம்பதி . காண்டிரக்டரான பாபுவுக்கு ஸ்வேதா (வயது 26) சாயி( வயது 20) என்ற இரு மகள்கள் உண்டு. தன் மகள்கள் மீது பாபு மீது மிகுந்த பாசமும் வைத்திருந்துள்ளார். மூத்த மகள் ஸ்வேதாவுக்கு ரூ. 16 லட்சம் வரதட்சணையாக கொடுத்து சுரேஷ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். சுரேஷ்குமார் சாப்ட்வேர் இன்ஜீனியர் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், திருமணத்துக்கு பிறகு ஸ்வேதாவின் வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. சுரேஷ்குமாருக்கு வேலை இல்லை என்பதும் ஸ்வேதாவுக்கு தெரிய வந்தது. இதனால், கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும்,சுரேஷ்குமார் தினமும் தினமும் குடித்து விட்டு வந்து, ஸ்வேதாவை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் வரதட்சணை கேட்டு ஸ்வேதாவை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

 தன் மகளை நல்லபடியாக வைத்து வாழும்படியும் அடித்து துன்புறுத்த வேண்டாம் என்று பாபு பல முறை சுரேஷ்குமாலிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். சுரேஷ்குமாரை பாபு கெஞ்சி கேட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. தொடர்ந்து போலீஸிலும் பாபு புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில், பாச மகளின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என்று மனக்கவலையில் கடந்த 7- ந் தேதி பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், தற்கொலைக்கு முன் தன் மரணத்துக்கு காரணம் மருமகன் சுரேஷ்குமார்தான் என்று செல்ஃபி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் பாபு.

இதையடுத்து, போலீஸார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தந்தை இறந்த சோகத்தில் இருந்த மகள்கள் ஸ்வேதா, சாய் ஆகியோரும் கடந்த 8- ந் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கணவரை தொடர்ந்து தன் மகள்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டதால், விஜயபாரதி பித்து பிடித்தவர் போல மாறி விட்டார். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மருமகன் என்பவர் இன்னோரு மகன் என்பார்கள். ஆனால், இங்கே ஒரு குடும்பத்தின் அழிவுக்கே மருமகன் காணரமாக அமைந்து விட்டது ஆந்திர மக்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments