காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் பதவியில் சோனியா காந்தி நீடிப்பார் - காங்கிரஸ்

0 903

காங்கிரஸ் கட்சிக்கான முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பது என்பது வெகுதொலைவில் இல்லை என, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக் மனு சிங்வி, கட்சிக்கான முழுநேர தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறைகள் தொடங்கி இருப்பதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், முழுநேர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தியே, இடைக்கால தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments