மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்ற 4 தமிழக மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

0 11134
மருத்துவப் படிப்புக்காக ரஷ்யா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள ஆறு ஒன்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புக்காக ரஷ்யா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள ஆறு ஒன்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய அந்த நால்வரும் ரஷ்யாவின் வால்கோகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.பி.பி.எஸ் பயின்று வந்துள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த இவர்கள் சனிக்கிழமை மாலை அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு விளையாடச் சென்றுள்ளனர். அப்போது மனோஜ் ஆனந்த் ஆற்று நீரில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அவரைக் காப்பாற்ற ஸ்டீபனும் அவரைத் தொடர்ந்து மற்ற இருவரும் என 4 பேருமே ஆற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 4 பேரின் சடலங்களும் சில மணி நேரங்களில் கரை ஒதுங்கியுள்ளன.

4 பேரின் உடல்களை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments