இன்டர்நெட் தொலைபேசி வாயிலாக.. இந்தியாவில் அமைதியை குலைக்க ஐஎஸ்ஐ சதி..!

0 2809
இன்டர்நெட் தொலைபேசி அழைப்புகள் வாயிலாக மக்களை தூண்டி இந்தியாவில் அமைதியை குலைக்கும் திட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்டர்நெட் தொலைபேசி அழைப்புகள் வாயிலாக மக்களை தூண்டி இந்தியாவில் அமைதியை குலைக்கும் திட்டத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துபாய் மற்றும் ஆஸ்திரேலிய தொலைபேசி எண்களில் இருந்து இது போன்று மக்களை தூண்டும் அழைப்புகள் வந்த து கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்கு இது போன்ற அழைப்புகள் வந்துள்ளதை தொடர்ந்து, தேசத்துரோகம், சதித்திட்டம் தீட்டுதல், அமைதியை குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இது போன்ற தொலைபேசி அழைப்புகளில் ராமர் கோவில் பூமி பூஜை குறித்தும், அதற்காக சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சதிவேலை நடத்துவது குறித்தும் பேசப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments