சீன படைகளை திரும்ப பெற இந்தியா வலியுறுத்தல்

0 1383
லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை பின்வாங்கச் செய்வதுடன், அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளையும் நிறுத்த சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை பின்வாங்கச் செய்வதுடன், அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளையும் நிறுத்த சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை குறைப்பது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஏற்கெனவே கமாண்டர்கள் நிலையில் 5 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில், லடாக் எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியில் சீனாவின் தரப்பில் அடுத்தக்கட்டமாக படை குறைப்பை மேற்கொள்வது குறித்து, ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடத்தப்பட்டது.

தவுலத் பெக் ஒல்டி பகுதியில் சீன எல்லைக்குள் இருக்கும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இரு நாட்டு ராணுவங்களையும் சேர்ந்த அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்த, தவுலத் பெக் ஒல்டி, தெப்சங் ஆகிய முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளை விலக்குவது குறித்தும், குறிப்பிட்ட பகுதிகளில் சீன ராணுவம் மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணிளை நிறுத்தவும் இந்தியா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதேசமயம், எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் நிலவிய சூழல் மீண்டும் திரும்பும் வரையில், இந்தியா தனது படையை எல்லையில் இருந்து நீக்கப்போவதில்லை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments