‘சிங்கம்’ இரட்டை மலையில் கெட்ட பசங்க கொட்டம்..! காதல் ஜோடி கதறல் வீடியோ

0 19082

சிங்கம் படத்தின் மூலம் பிரபலமான ஷூட்டிங் ஸ்பாட்டாக மாறிய நெல்லை ரெட்டியார்பட்டி இரட்டை மலை பகுதியில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் மற்றும் நகைகளை பறித்துச்செல்லும் பிளாக் மெயில் கும்பலின் கைவரிசை அதிகரித்துள்ளது. கொள்ளையர்களிடம் சிக்கிய காதல் ஜோடி கதறும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கம் படத்தில் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் படைபரிவாரங்களோடு நடந்து வந்து அமரும் காட்சி ஒன்று இரண்டு மலைகளுக்கு நடுவே போடப்பட்ட சாலையில் படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த படம் மட்டுமல்ல பல படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டாகவும், இந்த வழியாக பயணிப்போர் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாத்தளமாகவும் மாறியது நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி இரட்டை மலை பைபாஸ் சாலை பகுதி..!

இந்த மலை உச்சியில் 140 அடி உயரத்திற்கு காட்சிமுனை அமைத்து சுற்றுலாத் தலமாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாதி கட்டுமானம் நடந்த கட்டங்கள் உள்ள இந்த மலை பகுதி காதலர்கள் சந்திக்கும் ஹாட் ஸ்பாட்டாக மாறியது.

இதனை சாதகமாக்கிக் கொண்ட சமூக விரோதிகள், அங்கு வரும் காதலர்களை வீடியோ எடுத்து மிரட்டி நகை பணம் பறிக்கும் புகலிடமாக மாற்றியுள்ளனர்.

குறிப்பாக மலையின் மீது சந்திக்கும் பல காதல் ஜோடிகளிடம் நகை மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டு விரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. இன்னும் சில ஜோடிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறல்களும் நடை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.

ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி தனிமையில் சந்திக்க இந்த மலை பகுதிக்கு வந்து செல்லும் காதல் ஜோடிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதை ரவுடி கும்பல் ஒன்று தொடர்ந்து செய்து வருவதாக கூறப்படுகின்றது

கடந்த சில தினங்களில் மட்டும் அங்கு 10க்கும் மேற்பட்ட சம்பவம் நடந்துள்ள நிலையில் ஒரு சம்பவத்தில் சிக்கிய காதல் ஜோடிகளை முட்டிப்போட வைத்து மிரட்டும் வீடியோவை அந்த பிளாக் மெயில் கும்பல் வெளியிட்டதால் அந்த மலை மீது நடக்கின்ற அட்டூழியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காதலனுக்கு பரிசு கொடுக்கச் சென்ற அந்த பெண்ணை கதறவைத்த அந்த வழிப்பறிக்கும்பல் ஸ்மார்ட் போன், அவர்கள் அணிந்திருந்த நகைகளையும், பணத்தையும் பறித்துக் கொண்டு விரட்டியுள்ளது

இந்த வீடியோ வெளியாவதற்கு முன்பு வரை போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. வட மாநிலங்களில் நடப்பது போல தமிழகத்திலும் பிளாக்மெயில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதை இந்த வீடியோ மூலம் கண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடைய முன்னீர் பள்ளத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவன் இதே பகுதில் 10 க்கும் மேற்பட்ட ஜோடிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவனது கூட்டாளிகளான இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காதல் ஜோடிகள் இது போன்ற ஆளரவமற்ற இடங்களை தேடிச்செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறும் காவல்துறையினர். அங்கு நிரந்தரமாக ரோந்துவாகனம் ஒன்றை நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments