2 நாட்களுக்குள் சென்னையில் உள்ள வேதிப்பொருளை ராணுவ கிடங்குகளுக்கு மாற்ற முடிவு

0 2035
சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை 2 நாட்களுக்குள் அகற்ற மாநகராட்சி காவல்துறை முடிவு செய்துள்ளது. வடசென்னை துறைமுகக் கிடங்கில் உள்ள சுமார் 740 டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட்டை, உடனடியாக அகற்ற வேண்டும் என மாசுகாட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சுங்கத்துறை இணை ஆணையர் பழனியாண்டி, காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதில், அம்மோனியம் நைட்ரேட்டை மின்னணு மூலம் ஏலம் விடும் பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், உடனடியாக ராணுவத்திற்கு சொந்தமான  வெடிபொருள் பாதுகாப்பு கிடங்குகளுக்கு தற்காலிகமாக அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments