கேரள விமான விபத்து... விமானம் சறுக்கியது எப்படி?

0 23654
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியது

கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்திற்கு, அந்த விமான நிலையத்தின் டேபிள்டாப் அமைப்பே காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்தியாவில் மங்களூரு, கோழிக்கோடு விமான நிலையங்கள் டேபிள்டாப் வகையைச் சேர்ந்தவையாகும். மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த விமானநிலையத்தின் ஓடுபாதைகளின் முடிவானது, ஆபத்தான பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது.

துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக இருமுறை அம்முயற்சி தோல்வி அடைய, மூன்றாவது முயற்சியில் விமான நிலையத்தின் 10 வது ஓடுதளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில் ஓடுபாதையில் தரையிறக்கப்பட்ட விமானம் திடீரென சறுக்கியது. அபாயத்தை உணர்ந்த விமானி உடனடியாக செயல்பட்டு விமானத்தின் இன்ஜினை ஆஃப் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், விமானத்தின் வேகம் குறைந்த நிலையிலும், ஓடுபாதையின் எல்லையைக் கடந்து சென்ற விமானம், 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீப்பிடிக்காததால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

தலைமை விமானி தீபக் வசந்த் சாத்தே விமானத்தின் இன்ஜினை ஆப் செய்து வேகத்தை குறைத்ததன் காரணமாகவும், அதிகப்படியான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் இந்திய விமானப்படை வீரரான இவர், போர் விமானங்களை இயக்கும் அனுபவம் பெற்றவர் என்பதோடு , விமான பயிற்சியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பலரின் உயிரைக் காப்பாற்றிய போதும், விமானி இந்த விபத்தில் உயிரிழந்துவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments