நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பிக்கும் திட்டம்

0 5612
பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களும், நிறுவனங்களும் நிலுவையில் உள்ள கடன்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா பரவல், ஊரடங்கு ஆகியவற்றால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2008ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் முதன்முறையாகக் கடன் புதுப்பிப்புத் திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி தனி மனிதர்கள், நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு வசதியாகத் திவால் மற்றும் நொடிப்பு நிலையை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

கடனைக் காலதாமதமாகத் திருப்பிச் செலுத்த ரிசர்வ் வங்கி அறிவித்த காலம் ஆகஸ்டு 31ஆம் தேதி முடிவடைவதையொட்டி இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்கு முன்பே கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு இந்தக் கடன் புதுப்பிப்புத் திட்டம் பொருந்தாது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments