தமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி.. ஒரே நாளில் 119 பேர் பலி..!

0 5523
தமிழ்நாட்டில் இன்று 5880 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் புதிதாக  5 ஆயிரத்து 880 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

6 ஆயிரத்து 488 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டதால்,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27  ஆயிரத்தை தாண்டியுள்ளது.  9 - ஆவது நாளாக 6 ஆயிரம் பேருக்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

ஒரே நாளில் 67 ஆயிரத்து 352  மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமாக119 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 984 பேருக்கும், செங்கல்பட்டில் புதிதாக 319 நபர்களுக்கும், தேனியில் 351 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments