பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 1923

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து எந்நேரமும் உபரி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நீலகிரி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 95.75 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 44 ஆயிரத்து 511 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாக இருப்பினும் அக்டோபர் இறுதிவரை 102 அடி வரை மட்டுமே நீர்தேக்க முடியும் என்பதால் 102 அடியை எட்டியதும்  பவானி ஆற்றில் உபரிநீர்  திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கரையோர  மக்களுக்கு ஆற்றில் குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments